CINEMA
G.O.A.T படத்தில் விஜய்யின் கார் நம்பர் பிளேட் இதுதான்.. சர்ப்ரைஸை உளறி கொட்டிய நடிகர் பிரேம்ஜி..!
கோட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. படத்தைப் பற்றி இயக்குனர் ஒரு பக்கம், தயாரிப்பாளர் ஒரு பக்கம் என அனைவரும் புதுப்புது அப்டேட்டுகளை கொடுத்து வருகிறார்கள். படத்தைப் பற்றி ஒரு பெரிய ஹைப் இல்லாதவரை படத்திற்கு நல்லது என்று சொன்ன அர்ச்சனா கல்பாத்தியே ரிலீஸ் தேதி நெருங்கும் வேலையில் புதுப்புது சர்ப்ரைஸ்களை கொடுத்து வருகின்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் youtube சேனலில் பேட்டி கொடுத்த பிரேம்ஜி படத்தை பற்றி ஏராளமான தகவல்களை கூறியிருந்தார். படத்தில் பிரேம் செய்யும் விஜய்யும் மாமன் மச்சான் கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லி இருக்கிறார். இதில் சினேகாவுக்கு தம்பி கதாபாத்திரத்தில் பிரேம்ஜி நடித்துள்ளார். கோட் படத்தில் விஜய் பயன்படுத்தும் கார் நம்பர் பற்றிய ஒரு தகவலையும் அவர் கூறியுள்ளார்.
அதாவது படத்தின் கார் நம்பர் சிஎம் 2026 என்று தான் இருக்கிறதாம். இது அவருடைய 2026 சட்டமன்ற தேர்தலில் இலக்கை அடையும் விதமாக அதை கார் நம்பராக வைக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. மேலும் இந்த காரில் படத்தில் இரண்டே பேர் மட்டும் தான் அமர்ந்து இருப்பார்களாம். அதில் விஜய் மற்றொருவர் பிரேம்ஜி என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த செய்தி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.