CINEMA
இதனால தான் இசை வெளியீட்டு விழா வைக்கல.. உண்மையை உடைத்த GOAT பட தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி..!!
பிரபல நடிகரான விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். வருகிற ஐந்தாம் தேதி கோட் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோட் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மட்ட பாடல் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாக்கி ஒரு பேட்டியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் இசை வெளியீட்டு விழா நடத்தாதற்கு காரணம் என்ன என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த அர்ச்சனா கல்பாத்தி, எங்களுக்கு நிஜமாகவே டைம் இல்ல. இந்த படத்தை பொருத்தவரைக்கும் நாங்க ஒரு வருஷத்துல பண்ணி இருக்கோம். இது சென்னையில் 5 செட்டு போட்டு எடுத்த படம் கிடையாது. சொல்ல போனா நாங்க நிறைய நாடுகளுக்கு டிராவல் பண்ணி இருக்கோம். சில விஷயங்கள் உங்களுக்கு பார்க்க நார்மலா இருக்கும். அதுக்கு நாங்க நிறைய உழைச்சிருக்கோம். விஜய் பைக்ல போற காட்சி நீங்க பார்த்திருப்பீங்க.
அதை டெக்னிக்கலா கொண்டு வருது ரொம்ப கஷ்டம். நாங்க ரொம்ப பிஸி ஆயிட்டோம். எங்களை பொறுத்தவரைக்கும் நல்ல படம் கொடுக்க ட்ரை பண்ணி இருக்கோம். அத பத்தி பேசட்டுமே. டெக்னிக்கலா ரொம்ப ஸ்ட்ராங்கான படம். நல்ல கன்டென்ட் கொடுத்துருக்கோம். அதனாலதான் ஆடியோ லான்ச் நடத்த முடியல. படம் 3 லாங்குவேஜ்ல வருது. 5000 ஸ்கிரீன்ல ரிலீஸ் ஆகுது. எல்லா இடத்துக்கும் டெலிவரி கொடுக்கணும். நிறைய வேலை இருக்கு. அதனால தான் ஆடியோ லான்ச் நடத்தல என ஓப்பனாக பேசி உள்ளார்.