CINEMA
இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமிதான் இன்று தமிழ் சினிமாவின் பிரபல நடிகை.. யாருன்னு தெரியுமா..?
தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகை தான் நிவேதா பெத்துராஜ். பெரும்பாலும் நிறைய திரைப்படங்களில் நடித்த பிறகுதான் நடிகைகளுக்கு ஓரளவு அங்கீகாரம் கிடைக்கும். முந்தைய கால கட்டங்களில் எல்லாம் நடிகைகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைப்பது என்பது அரிதான விஷயமாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி கிடையாது.
சமூக வலைத்தளங்கள் தற்போது அதிகமாக வளர்ந்து விட்டதால் மிக எளிதாகவே மக்கள் மத்தியில் நடிகைகள் இடம் பிடித்து விடுகின்றனர். அப்படி 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நிவேதா பெத்துராஜ். இந்த படத்தில் அடியே அழகே என்ற ஒரு பாடல் மூலம் இவர் பிரபலமானார்.
அதன் பிறகு பொதுவாக என் மனசு தங்கம் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்த இவர் ஜெயம் ரவியுடன் இணைந்து டிக் டிக் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மேலும் பிரபலமானார். பிறகு திமிரு புடிச்சவன் திரைப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தார். அடுத்து சங்கத் தமிழன் என தமிழில் பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
2021 ஆம் ஆண்டு பொன்மாணிக்கவேல் என்ற தமிழ் திரைப்படத்தில் நடித்த பிறகு இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெலுங்கில் தான் தற்போது அதிக படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் நிவேதா பெத்துராஜின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.