CINEMA
என்கிட்ட நிறைய பணம் வந்துச்சுனா கண்டிப்பா இதை செஞ்சிடுவேன்… எமோஷனலாக பகிர்ந்த மும்தாஜ்…
மும்தாஜ் மும்பை பாந்திராவில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ் சினிமாவில் பணியாற்றிய பிரபல கவர்ச்சி நடிகை ஆவார். பள்ளியில் படிக்கும் போது ஸ்ரீதேவியின் தீவிர ரசிகையாக இருந்தவர் மும்தாஜ். தனது பள்ளியில் ஒரு நடன நிகழ்ச்சியில் தோன்றியதன் மூலம் ஒரு தயாரிப்பாளரின் கண்ணில் பட்டு சினிமா வாய்ப்பை பெற்றார் மும்தாஜ்.
ஆரம்பத்தில் ஹிந்தியில் சிறிய தோற்றத்தில் அறிமுகமான மும்தாஜ், 1999 ஆம் ஆண்டு டி ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் 2000 ஆண்டு குஷி திரைப்படத்தில் ஒரு கவர்ச்சியான நாயகியாக நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார்.
குஷி திரைப்படத்தில் விஜய் மற்றும் ஜோதிகா நடித்திருப்பர். இந்த திரைப்படத்தில் வரும் கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற பாடலில் விஜய் அவர்களுடன் இணைந்து நடனமாடி இருப்பார் மும்தாஜ். இந்த பாடல் மிகப் பிரபலம் அடைந்தது. படமும் மெகா ஹிட் ஆனது. அடுத்ததாக 2001 ஆம் ஆண்டு பிரசாந்துடன் ஸ்டார் திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தில் வரும் மச்ச மச்சினியே என்ற பாடலும் 2021 ஆம் ஆண்டு மீண்டும் பிரசாந்துடன் இணைந்து சாக்லேட் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் வரும் மலை மலை என்ற பாடலும் அந்த நேரத்தில் இளைஞர்களிடையே மிகப் பிரபலமாக இருந்தது.
தொடர்ந்து ஜெமினி, செல்லமே, லண்டன், வீராசாமி, மலபார் போலீஸ், ஏழுமலை போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் மும்தாஜ். பின்னர் சினிமாவிலிருந்து நீண்ட இடைவேளை எடுத்துக்கொண்ட மும்தாஜ் 2018 ஆம் ஆண்டு விஜய் டிவி நடத்திய பிக் பாஸ் சீசன் இரண்டில் தோன்றினார். அதற்குப் பிறகு முற்றிலுமாக சினிமா விட்டு விலகிவிட்டார் மும்தாஜ்.
தற்போது முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த மும்தாஜ் தீவிரமான முஸ்லிம் மார்க்கத்தின் நுழைந்து ஆன்மீகவாதியாக இருக்கிறார். முழுவதுமாகவே புர்காவால் போர்த்திக்கொண்டு தான் நேர்காணலில் தோன்றுகிறார். மும்தாஜ் சமீபத்தில் கூட அவர் மெக்காவிற்கு சென்ற வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அப்போது ஒரு நேர்காணலில் மும்தாஜ் நான் அந்த காலத்தில் கவர்ச்சியாக நடித்தது மிகவும் தவறு. அதை நான் செய்திருக்கக் கூடாது. இப்போது இஸ்லாம் மார்க்கத்திற்குள் முழுவதாக சென்ற பிறகுதான் அது எவ்வளவு பெரிய பாவம் என்று எனக்கு தெரிந்தது. என்னுடைய ரசிகர்களாக இருப்பவர்களுக்கு நான் கூறிக் கொள்ளும் வேண்டுகோள் இதுதான். என்னுடைய பழைய படங்களையும் போட்டோக்களையும் பார்க்காதீர்கள் என்று தான் கேட்டுக் கொள்வேன். அது மட்டுமில்லாமல் என்னிடம் பணம் அதிகமாக இல்லை. என்னிடம் நிறைய பணம் வந்துச்சுன்னா நான் கவர்ச்சியாக நடித்த படங்களின் காப்பிகளை எல்லாம் வாங்கி தீ வைத்து எரிச்சிடுவேன் என்று கூறியிருக்கிறார் மும்தாஜ்.