CINEMA
“டேய் நீ சாகக்கூடாது”.. சக நடிகருக்காக திருப்பதிக்கு நடந்தே சென்ற தேங்காய் சீனிவாசன்.. நெகிழ்ச்சி..!
சினிமாவில் ஒரு நடிகருக்கும் மற்றொரு நடிகருக்கும் போட்டி என்பது இருந்தாலும் அவர்களுக்கு இடையில் ஒரு ஆழமான நட்பு இருக்கும். தற்போது டிஜிட்டல் சினிமாவில் இந்த நட்பு வட்டாரம் சிறியதாக இருந்தாலும் டெக்னாலஜி வசதிகள் இல்லாத அந்த காலத்தில் நடிகர்கள் பலரும் நட்பு பாராட்டி வந்துள்ளனர். அதற்கு முக்கியச் சான்று தான் நடிகர் தேங்காய் சீனிவாசன். இவர் 1965 ஆம் ஆண்டு வெளியான ஒரு விரல் என்ற திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இவர் சிவாஜி, முத்துராமன் மற்றும் ஜெமினிகணேசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
அதனைப் போலவே ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். திரைத்துறையில் அனைவருடனும் நெருங்கி பழகும் தேங்காய் சீனிவாசன் வெண்வென்னிற ணிற ஆடை மூர்த்தியுடன் ஆழமான நட்பு கொண்டிருந்தார். ஒருமுறை அவருக்கு உடல்நிலை சரியில்லாத போது மிகவும் கவலை அடைந்த தேங்காய் சீனிவாசன் தன்னுடைய நண்பன் உடல்நிலை சரியாக வேண்டும் என்று கூறி திருப்பதிக்கு நடந்தே சென்றுள்ளார். இந்த தகவலை ஒரு நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க வென்னிற ஆடை மூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஒருமுறை தனக்கு இதயத்தில் பிரச்சனை ஏற்பட்டபோது என்னை பார்க்க வந்த தேங்காய் சீனிவாசன் டேய் நீ சாகக்கூடாது எனக்கு அப்புறம் நீ தான் என்று சொல்லிவிட்டு திருப்பதிக்கு நடந்தே சென்றான். தரிசனம் முடிந்து திரும்பி வந்து டேய் நீ நல்லா இருப்ப நடந்து போயிட்டு வந்துட்டேன் பெருமாள் உன்னை கைவிடமாட்டார் என்று கூறியதும் எனக்கு கண்ணீர் வந்துவிட்டது என வருத்தத்துடன் தேங்காய் சீனிவாசன் பற்றி வென்னிற ஆடை மூர்த்தி கூறியுள்ளார்.