BREAKING: உதயநிதி ஸ்டாலின் ஜாமினில் விடுவிப்பு…!

By Swetha on ஆவணி 4, 2026

Spread the love

தஞ்சாவூரில் நடைபெற்ற தவெக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆபாசமாக பேசியதாகக் கூறி, திமுக நிர்வாகி உதயநிதி இன்று காலை 10:30 மணி அளவில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணைக்குக்குப் பிறகு, உதயநிதியை காவல்துறையினர் ஜாமினில் விடுவித்தனர். அவர் வெளியே வந்ததும், காவல் நிலையத்திற்கு வெளியே திரண்டிருந்த ஏராளமான திமுகவினர் வாணவேடிக்கை நிகழ்த்தியும், விசில் அடித்தும் தங்களது மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் வெளிப்படுத்தினர்.