காலையிலேயே குட் நியூஸ்… விடுபட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை… உதயநிதி சூப்பர் அறிவிப்பு…!

By Nanthini on புரட்டாதி 24, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது திமுக மக்களை கவரும் வகையில் அதிரடியான வாக்குறுதிகளை அளித்திருந்தது. அதில் முக்கியமான ஒன்றுதான் மகளிர் உரிமைத்தொகை. இந்த திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பயனடைந்து வரும் நிலையில் விடுபட்ட அனைவருக்கும் மீண்டும் உரிமைத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக விடுபட்டவர்கள் அனைவரும் மீண்டும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்து வருகிறார்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

இந்நிலையில் ஓரிரு மாதங்களில் கூடுதல் மகளிருக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு தீபாவளி பரிசாக அக்டோபர் 15ஆம் தேதி முதல் கட்ட பணம் அனுப்பப்படலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.