கன்னியாகுமரி மாவட்டம் ராணியல் அருகே உள்ள காரங்காடு பகுதியில் ஞானசெல்வன் என்பவர் தன் மனைவி ரூபி ஆன்றணி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஞானசெல்வன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் ரூபி மகள்களுடன் சொந்த வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை ரூபி தன்னுடைய 19 வயதான மூத்த மகள் அஸ்வரியை வீட்டில் விட்டுவிட்டு இளைய மகளுடன் அருகில் உள்ள தேவாலயத்திற்கு சென்றார். அப்போது வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் வெடித்து சிதறும் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தபோது அஸ்வினியின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தண்ணீர் ஊற்றி அணைக்க முயற்சித்தனர்.
கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றபோது அஸ்வினி உடல்கழுக்கி உயிரிழந்து சடலமாக கீழே கிடந்தார். பிறகு அக்கம் பக்கத்தினர் தாயார் ரூபிக்கு தகவல் கொடுத்த நிலையில் தகவல் அறிந்து வந்த ரூபி மகளின் சடலத்தை கண்டு கதறி அழுதார். பிறகே அங்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில் 19 வயதான அஸ்வினி நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருவதும் முடி உதிர்வு பிரச்சனையில் சிக்கியவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள தனியார் அழகு நிலையத்தில் முடி உதிர்வு பிரச்சனைக்கு சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்தது.
மேலும் முடி உதிர்வுக்காக தொடர் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு தீராத தலைவலி மற்றும் சைனஸ் பிரச்சனை ஏற்பட்டதால் கடந்த வாரம் தலைவலி பிரச்சனைக்கு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அன்று முதல் மன உளைச்சலில் இருந்து அஸ்வினி வீட்டில் பைக்குக்கு பயன்படுத்துவதற்காக பாட்டிலில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முடி உதிர்வால் இளம் பெண் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது
