சற்றுமுன்: மீண்டும் இணையும் ஓபிஎஸ்… செம ஷாக்கில் இபிஎஸ்… தொடரும் பரபரப்பு…!

By Nanthini on புரட்டாதி 24, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற காலம் போய் தற்போது விஜயும் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். இதனிடையே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் நிர்வாகிகள் பலரும் இபிஎஸ் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதிமுகவில் இருக்கும் பிரச்சனையை விரைவில் சமூகமாக தீர்த்து பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற அமைப்பில் செயல்பட்டு வருகிறது.

அதேசமயம் சமீபத்தில் NDA கூட்டணியில் இருந்து விலகுவதாக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அறிவித்திருந்தனர். இந்நிலையில் அண்ணாமலை சமீபத்தில் டிடிவி தினகரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் தற்போது ஓபிஎஸ் உடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். டெல்லி சந்திப்பின்போது, ஓபிஎஸ்ஐ அதிமுகவில் சேர்க்க முடியாது, ஆனால் NDA கூட்டணியில் சேர்க்கலாம் என்று இபிஎஸ் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் கூட்டணியில் இணைக்கும் பொறுப்பு அண்ணாமலையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது அவரும் கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.