உத்திரபிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்தவர் சூரஜ்குமார். எலக்ட்ரீசியனாக பணிபுரியும் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அகன்ஷாவிற்கும் இன்ஸ்டா மூலமாக பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து லிவிங் டூ கெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் அகன்ஷாவின் தாயார் தன்னுடைய மகளை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் சூரஜ்குமார் தான் தன்னுடைய மகளை கடத்தி சென்றிருப்பார் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை தொடங்கினார்கள்.
முதற்பட்டமாக பெண்ணின் காதலன் சூரஜ்குமாரை பிடித்து விசாரித்ததில் என்னுடன் தான் இருந்தார். அதன் பிறகு எங்கு சென்றார் என்பது தெரியவில்லை என்று கூறியதால் சந்தேகம் எழுந்தது. அதன் பிறகு அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் சூரஜ் குமாருக்கு வேறொரு பெண்ணோடு தொடர்பு இருந்துள்ளது. அதன் காரணமாக சூரஜ் குமார் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த அகன்ஷா சூரஜ்குமாரிடம் குறித்து கேட்க அவ்வப்போது இருவரிடம் தவறாக ஏற்பட்டு வந்துள்ளது.
மேலும் அந்த பெண்ணிடம் பழகுவதையும் கைவிட்டு தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்துள்ளார் அகன்ஷா. இது குறித்து இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த சூரஜ்குமார் தன்னுடைய காதலி அகன்ஷாவை சரமாரியாக தாக்கி தலையை சுவற்றில் அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்து பின்னர் அதை ஒரு பெரிய சூட்கேஷில் அடைத்து யமுனா நதியில் வீசியுள்ளார் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளார்கள்.
