திமுக இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினை அப்பதவியிலிருந்து மாற்றம் செய்யக் கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்குப் பதிலாகக் கட்சியில் மிக முக்கியமான முதன்மைப் பொறுப்ப ஒன்றை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டு வருகிறது. முன்பு கருணாநிதி தலைவராக இருந்த காலத்தில் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராகச் செயல்பட்டதைப் போல, தற்போதையத் தலைவர் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக உள்ள உயர் இடத்தில் உதயநிதியை அமரவைக்க உயர்மட்ட நகர்வுகள் நடந்து வருகின்றன.
முன்னதாக, உதயநிதி ஸ்டாலினை ‘இளைய கலைஞர்’ என்று கட்சியினர் அழைக்க வேண்டும் எனக் கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் பரவிய நிலையில், தற்போது அவருக்குக் கட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த புதிய பொறுப்பு வழங்கப்படவுள்ளது திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரடி மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாதாத்ரி புவனகிரி மாவட்டம், சௌதுப்பால் மண்டலம், பந்தங்கி கிராமத்தைச் சேர்ந்த ரபோலு தனய்யா என்ற விவசாயி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.…
அரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் கணவனை மனைவியே கொடூரமான முறையில் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சந்தேகத்திற்குரிய அந்தப்…
பழைய டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண், தனது காதலனுடன் இரவு 10 மணிக்கு ஏற்பட்ட ஒரு சிறிய தலைவலி தகராறால்…
பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…
சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…