திமுகவில் வெடித்த குடும்ப சண்டை… உதயநிதிக்கு கயல்விழி கொடுத்த மரண அடி… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு…!

By Nanthini on சித்திரை 16, 2026

Spread the love

திமுக உட்கட்சி அரசியலில் நீண்டகாலமாக நிலவி வரும் புகைச்சல், தற்போது மு.க.அழகிரியின் மகள் கயல்விழியின் காட்டமான விமர்சனங்களால் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. “சொந்த அண்ணனுக்கே ஸ்டாலின் பக்கபலமாக இல்லை” என்று நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், அதிமுகவில் இருந்து விலகி வந்த ஓ.பன்னீர்செல்வத்தை (OPS) திமுக கூட்டணியிலோ அல்லது ஆதரவு நிலைப்பாட்டிலோ அரவணைக்கும் முதல்வர் ஸ்டாலின், தன் உடன் பிறந்த அண்ணனை மீண்டும் கட்சியில் சேர்க்க ஏன் தயங்குகிறார் என்ற தார்மீகக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேலும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை “சசிகலா காலில் விழுந்தவர்” என்றும் “தவழ்ந்து சென்றவர்” என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து கிண்டல் செய்து வருவதைச் சுட்டிக்காட்டிய கயல்விழி, ஒரு முன்னாள் முதல்வர் என்றும் பாராமல் அத்தகைய தரம் தாழ்ந்த விமர்சனங்களை முன்வைப்பது மிகப்பெரிய அரசியல் தவறு எனக் கண்டித்துள்ளார். கயல்விழியின் இந்த அதிரடிப் பேச்சு, திமுகவின் குடும்ப அரசியலுக்குள் இருக்கும் விரிசலையும், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான உதயநிதியின் அணுகுமுறை குறித்த அதிருப்தியையும் வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறது.