கடலூர் மாவட்டம் பண்ருட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்த மல்லிகா என்பவருடைய மகன் டேவிட் என்பவருக்கும் வேலூர் பகுதியை சேர்ந்த ராஜலஷ்மி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இளைய மகனுக்கு மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், தந்தை டே வீட்டு கூலி வேலை செய்து மூத்த மகனை படிக்க வைத்துள்ளார். ஆனால் விஜய் சரியாக படிப்பு வரவில்லை என்று படிப்பை நிறுத்திவிட்டு அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று உள்ளார். பிறகு கணவர் டேவிட் உயிரிழந்த நிலையில் ராஜலட்சுமி அவருடைய மாமியார் மற்றும் இரண்டு மகன்கள் உடன் வசித்து வந்தார். கூலி வேலை செய்து ராஜலஷ்மி குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில் மூத்த மகன் விஜய் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் கஞ்சா பிடிப்பது போன்ற தேவையற்ற பழக்கங்களுக்கும் அவர் அடிமையாகி விட்டார். வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் குடித்துவிட்டு வந்து தன்னுடைய தாய், பாட்டி மற்றும் சகோதரனை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் தாய் மற்றும் மகனுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தினமும் இதுவே வாடிக்கையாக இருந்த நிலையில் ஒரு கட்டத்திற்கு மேல் மூத்த மகன் விஜய் இடம் சொல்லாமல் தனது இளைய மகனை அழைத்துக் கொண்டு அவரது தாய் வீட்டுக்கு ராஜலக்ஷ்மி சென்றுவிட்டார். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் விஜய் வழக்கமாக குடித்துவிட்டு வீட்டின் அக்கம் பக்கத்தில் இருக்கும் குடும்பங்களிடம் பிரச்சனை செய்து வந்துள்ளார்.
இதனை அறிந்து நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்த ராஜலட்சுமி நண்பர்களுடன் இருந்த விஜயை வீட்டுக்கு அழைத்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் சமையலறையில் இருந்த ஓவனை எடுத்து தனது தாயின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ராஜலஷ்மி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜலட்சுமி உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு விஜயை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். பெற்ற மகனே தாயை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சமஸ்திபூர் மாவட்டம் சக் சாஹோ பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், வகுப்பறையின் பின் வரிசை மேஜை மீது படுத்துக்கொண்டு ஆசிரியை…
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடமும் மேலோங்கி இருக்கிறது. ஆனால், "அட்சயம்" என்பதற்கு குறையாதது…
யவத்மால் மாவட்டத்தின் ஆர்னி தாலுகாவில் உள்ள போர்கான் கிராமத்தில் வசித்து வந்த மனோஜ் என்பவர், தனது நண்பரை இரவு உணவிற்காக…
ஆக்ராவில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான கொலைச் சம்பவம் கேட்போர் நெஞ்சைப் பதற வைத்துள்ளது. தனது…
புதுச்சேரி வில்லியனூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, முந்திரி தோப்பில் புதைக்கப்பட்ட சம்பவம்…
கல்லூரி வளாகத்தில் கூட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்த வரிசையில் தந்தை அமர்ந்திருக்க, அவருக்கு அடுத்த இருக்கையில் அவருடைய மகளும், மகளுக்கு…