ஜோசியக்காரன் சொன்னாதான் ஃபைலை திறப்பீர்களா?… சட்டமன்றத்தை உலுக்கிய உதயநிதி ஸ்டாலினின் காரசார கேள்வி….!

Spread the love

சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆளுங்கட்சி அமைச்சர்களுக்கு இடையே நடைபெற்ற காரசாரமான விவாதங்கள், தற்போதைய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. “எங்களிடம் 3 ஃபைல்கள் உள்ளன. அதை ஓபன் செய்ய வைத்துவிடாதீர்கள் என முதல்வர் கூறுகிறார். தயவுசெய்து அந்த ஃபைல்களை உடனே திறந்து பார்த்து நடவடிக்கை எடுங்கள். எதற்காகப் பயந்து காலம் தாழ்த்துகிறீர்கள்? ஃபைலைத் திறக்க ஜோசியக்காரன் சொன்னால்தான் திறப்பீர்களா?” என உதயநிதி ஸ்டாலின் காட்டமாகக் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மிசாவையே பார்த்தவர்கள் தங்கள் தலைவர்கள் என்றும், சட்டப்படி உரிய நேரத்தில் அந்த ஃபைல்கள் மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்றும் உறுதியளித்தார்.

இவ்விவாதத்தின் போது ‘ஜோதிடர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் ஆட்சேபம் தெரிவித்து, அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரிக்கை வைத்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நிர்மல்குமார் பேசுகையில், ஜோசியம் பார்த்து மஞ்சள் துண்டு போட்ட வரலாறுகள் தங்களுக்கும் தெரியும் என்றும், அரசு எப்போது நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அப்போது சரியான நேரத்தில் எடுக்கும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படும் விவாதங்கள் கூட சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ ஆக வெளியாகி விடுவதாகச் சுட்டிக்காட்டினார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர், அவையிலிருந்து நீக்கப்பட்ட வாதங்களை வெளியிடும் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மீது கண்டிப்பான உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

Nanthini

Recent Posts

அவங்கள சும்மா விடாதீங்க சார்… என் மகள சித்ரவதை செஞ்சு கொன்னுட்டாங்க… 3 மாத கர்ப்பிணி அதிகாரியின்… மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கதறல்…!

பாதுகாப்பு அமைச்சகத்தில் உதவிப் பிரிவு அலுவலராக பணியாற்றி வந்த 30 வயதான நாசியா கானம் என்ற பெண், துவாரகாவில் உள்ள…

1 மணத்தியாலம் ago

“அக்கா… ஓலாவைப் பார்த்துக்கோங்க… என்கிட்ட இந்த 50,000 ரூபாய் மட்டும்தான் இருக்கு… நெட்டிசன்களை உருக வைத்த சிறுவனின் லெட்டர்…!”

கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த நடுநிலைப் பள்ளி மாணவன் ஒருவன், தான் உயிருக்கு உயிராக நேசித்த 'ஓலா' என்ற பூனையைத்…

1 மணத்தியாலம் ago

அரசியல் என்ட்ரி உறுதியா?… “நல்லது செய்ய கட்சி தேவையில்லை!”… உண்மையை உடைத்த ரவி மோகன்… வைரலாகும் வீடியோ…!!

சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தனது ரசிகரின் திருமண விழாவில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், அரசியல் வருகை குறித்த தனது…

2 மணத்தியாலங்கள் ago

அடியே… எங்க போன் எங்கடி?… நர்ஸ் கல்லூரியில் நள்ளிரவில் அடிதடி… மாணவிகள் இடையே பயங்கர மோதல்… ஆந்திரப் பிரதேசத்தின் பரபரப்பு…!

ஆந்திரப் பிரதேசத்தின் காக்கினாடா பகுதியில் அமைந்துள்ள எஸ்.கே. செவிலியர் கல்லூரியில், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும் உள்ளூர் தெலுங்கு பேசும்…

2 மணத்தியாலங்கள் ago

திருமணம் கேட்டதால் விபரீதம்… பார்சலில் போன உடல்… பாத்திரத்தில் வெந்த தலை… சினிமா காட்சியை மிஞ்சிய கூடுவாஞ்சேரி பயங்கரம்…!!

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், கேட்பாரற்று கிடந்த சிவப்பு நிற…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ காப்பாத்துங்க… டேங்கர் லாரியில் சிக்கித் துடித்த முதியவர்… காசர்கோட்டில் பயங்கர விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி… !

காசர்கோடு எம்.ஜி. சாலையில் உள்ள ஹைப்பர் மார்க்கெட் அருகே ஆகஸ்ட் 19 அன்று நிகழ்ந்த வீதி விபத்தில், ஹனிஃபா என்ற…

2 மணத்தியாலங்கள் ago