“கொண்டாட்டமான தருணம்… நொடியில் முடிந்த வாழ்க்கை…” அதிவேகத்தால் நடுரோட்டில் நொறுங்கிய தார்…. 2 பேர் துடிதுடித்து பலி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

Spread the love

கர்நாடக மாநிலம் நெலமங்களா தாலுகாவிற்குட்பட்ட கம்பாலு கிராமத்திற்கு அருகே செவ்வாய்க்கிழமை இரவு பயங்கர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்தது. நண்பரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுவிட்டு மஹிந்திரா தார் வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர்களின் வாகனம், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் பவன் மற்றும் தீபக் ஆகிய இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

வாகனத்தில் இருந்த மற்ற மூன்று பேர் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில், அப்பகுதி மக்களும் காவல்துறையினரும் இணைந்து அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். வாகனத்தின் அதிவேகமே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில், தோப்பஸ்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

குங்குமம் வைத்த மனைவி…! காருக்குள் கணவருக்கு வலுகட்டாயமாக சுன்னத்…! சித்தரவதை செய்த குடும்பத்தினர்… பரபரப்பு பின்னணி..!!!

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அகில் குமார் சந்தக் என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு டெல்லியில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த நூர்ஷிகா…

24 minutes ago

“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…

43 minutes ago

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

1 மணத்தியாலம் ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

1 மணத்தியாலம் ago

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

1 மணத்தியாலம் ago