அவங்களையே அப்படி சொன்னாங்க, அப்போ என்ன மட்டும் எப்படி சொல்லாம இருப்பாங்க.. மாநாட்டில் தெறிக்கவிட்ட விஜய்..!

By Nanthini on ஐப்பசி 28, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் விஜய் தற்போது சினிமாவிலிருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். இவருடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் வந்து பல லட்சம் தொண்டர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். விஜய் ஆனந்த கண்ணீர் சிந்தும் அளவிற்கு தொண்டர்களின் அன்பு அந்த இடத்தில் நிறைந்திருந்தது. வெயிலையும் பொருட்படுத்தாமல் விஜய்க்காக லட்சக்கணக்கான தொண்டர்கள் காத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மாநாட்டுக்கு வந்த விஜய் மூத்த தலைவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பிறகு கட்சி கொடியை ஏற்றினார்.

த.வெ.க மாநாடு: நடிகர் விஜய் பாஜக, திமுக மீது முன்வைத்த விமர்சனங்கள் என்ன?  முழு விவரம் - BBC News தமிழ்

   

 

   

தொடர்ந்து கட்சியின் கோட்பாடுகள் வாசிக்கப்பட்டன. அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து தனது தொண்டர்களுடன் உரையாற்ற தொடங்கிய விஜய் ஒரு குழந்தை மற்றும் பாம்பு கதையை சொல்லி தனது உரையை தொடங்கினார். அப்படி தனது முதல் மாநாட்டில் பேசிய விஜய், கட்சியின் கொள்கை கோட்பாடுகள் மற்றும் செயல் திட்டங்கள் பற்றி பேசினார். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் தவெக- வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியார் மற்றும் அண்ணா பெயரை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை சுரண்டும் ஒரு குடும்ப சுயநல கூட்டம் நமது அரசியல் எதிரி என்று விஜய் பேசி இருந்தார்.

 

பிளவுவாத அரசியலும் ஊழல் அரசியலும் தான் நம் கட்சியின் எதிரிகள் என தெரிவித்தார். தன்னை கூத்தாடி என்று விமர்சிப்பவர்கள் குறித்து பேசிய விஜய், இங்க நிறைய பேர் என்ன கூத்தாடி கூத்தாடின்னு சொல்றாங்க. கூத்துனா என்ன கெட்ட வார்த்தையா. குத்து தான் இந்த மண்ணின் கலை. இதே போலத்தான் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த போது சொன்னாங்க. அதேபோல் தெலுங்கில் என்.டி.ஆரை சொன்னாங்க.

ஆனால் இந்த கூத்தாடிகள் தான் அந்த இரண்டு மாநிலங்களையும் ஆண்டார்கள். அவர்களையே கூத்தாடி என்று சொல்லும்போது நம்மள சொல்ல மாட்டாங்களா. கூத்துதான் அரசியல் அறிவியல் என பல விஷயங்களை பேசி இருக்கிறது. அன்று கூத்தாக இருந்தது தான் இந்த சினிமாவாக மாறியுள்ளது. எனக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பிடித்து சுழன்று போராடி தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். ஒருவன் நடிகன் ஆவான், அவன் ஒரு நல்ல மனிதனானான், அவன் ஒரு நல்ல தலைவனாக முடிந்ததா என்று விஜய் பேசியுள்ளார்.