தமிழ் சினிமாவில் என்றும் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதை சொல்லி தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்துள்ளார். இன்னும் சொல்லப்போனால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் இவருக்கு உள்ளது. நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடிக்கும் போது இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அந்த காதல் அப்படியே பாதியில் முடிந்து விடும் என்று பலர் கூறி வந்த நிலையில் அவர்களின் அன்பை நிரூபிக்கும் விதமாக திருமணம் செய்து கொண்டனர்.
தற்போது இந்த தம்பதிகளுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். என்னதான் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் தனது குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளும் நயன்தாரா அடிக்கடி தனது குழந்தைகளுடன் நேரம் செலவிடும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நயன்தாரா சினிமாவை தாண்டி பல தொழில்களை செய்து வருகிறார். சாய்வாலே என்ற சென்னையை சேர்ந்த பிரபலமான டீக்கடை ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் 2021 முதல் நயன்தாரா ஐந்து கோடி முதலீடு செய்துள்ளார். 2021 ஆம் ஆண்டு முதல் பிரபல தோல் மருத்துவர் ரெனிதா ராஜனுடன் கைகோர்த்து லிப்பாம் நிறுவனத்தை நடத்தி வருகின்றார்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் எண்ணெய் வணிகத்தில் மாதம் 100 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார். 9 ஸ்கின் என்ற நிறுவனத்தை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கி நடத்தி வருகிறார். அதில் ஆன்ட்டி ஏஜ் சீரம், நைட் கிரீம், டே க்ரீம் உள்ளிட்ட அழகு சாதன பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
அதனைப் போலவே ஈரோட்டை சேர்ந்த டாக்டர் கோமதி என்பவருடன் 2023 முதல் பெமி 9 என்ற பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இப்படி பல தொழில்களை செய்து வரும் நயன்தாரா தனது பிசினஸை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். ரிலையன்ஸ் ரீடெய்ல்ஸ் டீராவுடன் இணைந்து நயன்தாராவால் நிறுவப்பட்ட தோல் பராமரிப்பு பிராண்டான 9ஸ்கின் கூட்டுறவைக் குறிக்கும் வகையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் நயன்தாரா. இந்தியாவில் ஒரு பெரிய விரிவாக்கத்திற்காக அமைக்கப்படும், தயாரிப்புகள் தீராவின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க