இந்திய ரயில்வே தனது டிஜிட்டல் சேவைகளில் ஒரு முக்கிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. மார்ச் 1, 2026 முதல், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை எடுக்கப் பயன்படும் பிரபலமான ‘யுடிஎஸ்’ (UTS) செயலி அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்படுகிறது. அதற்குப் பதிலாக, ‘ரயில் ஒன்’ (RailOne) என்ற புதிய ‘சூப்பர் ஆப்’ (Super App) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி பயணிகள் ஒரே செயலி மூலம் தங்களின் அனைத்து ரயில் பயணத் தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மாற்றத்தின் மூலம், பயணிகள் பொதுவான (General) டிக்கெட்டுகள், நடைமேடை (Platform) டிக்கெட்டுகள் மற்றும் சீசன் பாஸ்களை இனி ‘ரயில் ஒன்’ செயலி வாயிலாகவே முன்பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே யுடிஎஸ் செயலியைப் பயன்படுத்தி வந்த பயணிகள், தங்களின் பழைய பயனர் பெயர் (ID) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தியே புதிய செயலியில் நுழைய முடியும். உங்கள் யுடிஎஸ் வாலட்டில் (R-Wallet) மீதமுள்ள பணம் பாதுகாப்பாக புதிய செயலிக்கு மாற்றப்படும் என்பதால் பயணிகள் அச்சப்படத் தேவையில்லை.
‘ரயில் ஒன்’ செயலியானது வெறும் டிக்கெட் முன்பதிவுக்காக மட்டும் அல்லாமல், பல்வேறு வசதிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளைப் பெறுதல், ரயில்கள் தற்போது எங்கே வருகின்றன என்பதை அறியும் வசதி (Live Status), பிஎன்ஆர் (PNR) நிலை, உணவுகளை ஆர்டர் செய்தல் மற்றும் குறைகளைத் தெரிவிக்கும் ‘ரயில் மதாத்’ போன்ற அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் வழங்கப்பட்டுள்ளன. இது பயணிகளுக்கு வெவ்வேறு பயன்பாடுகளுக்கு தனித்தனி செயலிகளைத் தேடும் சிரமத்தைக் குறைக்கும்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், ‘ரயில் ஒன்’ செயலி மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை எடுக்கும் பயணிகளுக்கு 3% தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை 2026 ஜூலை 14 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். எனவே, ரயில் பயணிகள் சிரமமின்றி பயணிக்க மார்ச் 1-க்குள் ‘ரயில் ஒன்’ செயலியைத் தரவிறக்கம் செய்து அதைப் பயன்படுத்தப் பழகிக்கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…