அதிமுகவின் முக்கியப் பிரமுகர்களைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைப்பதற்கான முயற்சியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான சி.கிருஷ்ணன் மற்றும் மரியமுல் ஆசியா ஆகியோர் அடுத்தடுத்து தவெகவில் இணைந்துள்ளனர்.
இந்த அதிரடி மாற்றங்கள் குறித்து ஏற்கனவே பேசியிருந்த செங்கோட்டையன், பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்கள் கட்சியில் இணைவார்கள் என்று தெரிவித்திருந்தார் . இந்த அடுத்தடுத்த கட்சித் தாவல்கள் அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்
