விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கீழக்கொந்தை கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி சுபஸ்ரீ, வீட்டில் ஏற்பட்ட சிறிய மன வருத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறையில் வீட்டில் இருந்த மாணவியிடம், அவரது தாய் துணி துவைப்பது மற்றும் சமையல் செய்வது போன்ற வீட்டு வேலைகளைச் செய்யுமாறு கூறியுள்ளார்.
வேலை செய்யச் சொன்னதால் மனமுடைந்த சுபஸ்ரீ, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வீட்டு வேலை செய்யச் சொன்னதால் ஏற்பட்ட மன உளைச்சலே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
