“எப்படியாவது வேலை வாங்கணும்…” குறுக்கு வழியில் இறங்கிய கேரள வாலிபர்…. போலீஸ் அதிரடி…!!

By Devi Ramu on மார்கழி 29, 2025

Spread the love

கோவையில் நடைபெற்ற ரயில்வே தேர்வில் காப்பியடிக்க முயன்ற கேரள வாலிபர் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையை அடுத்த ஆளுந்துறை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ரயில்வே குரூப்-4 பணிகளுக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத கேரள மாநிலத்தைச் சேர்ந்த அனிஷாத் என்ற வாலிபரும் வந்திருந்தார்.

தேர்வு அறையில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது, அனிஷாத் தனது உடையில் ரகசியமாகச் செல்போனை மறைத்து வைத்திருப்பதை அங்கிருந்த கண்காணிப்பாளர் கண்டுபிடித்தார். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தேர்வில் முறைகேடு செய்ய முயன்றது தெரியவந்ததையடுத்து, அவர் உடனடியாக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். ரயில்வே தேர்வில் காப்பியடிக்க முயன்ற குற்றத்திற்காக அனிஷாத்தை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.