தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கூட்டணியின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். சமீபத்திய செய்திகளின்படி பாஜகவுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்பதை விஜய் தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது. முன்னதாக, பாஜகவின் கொள்கைகளைத் தனது கட்சிக்கு “கருத்தியல் எதிரி” என்றும், ஆளுங்கட்சியான திமுகவை “அரசியல் எதிரி” என்றும் விஜய் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இந்த சூழலில், பாஜகவோடு கூட்டணி அமைப்பதாக பரவிய தகவல்கள் முற்றிலும் வதந்தி என த.வெ.க தலைமை விளக்கம் அளித்துள்ளது.
பாஜக தங்களின் கொள்கை எதிரி என்பதில் உறுதியாக இருப்பதாக தவெக செய்தித் தொடர்பாளர் லயோலா மணி உறுதிப்படுத்தியுள்ளார். திருவெற்றியூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் பாஜக வளர்வது பெரும் ஆபத்து அதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றார். முன்னதாக பாஜக-வுடன் மென்மையான போக்கை கடைப்பிடிக்கும் தவெக NDA கூட்டணியில் இணையும் என அமைச்சர் TM அன்பரசன் உள்ளிட்டோர் பேசி வந்தனர்.
தற்போது விஜய் தனது கட்சியின் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளார். 2026 தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க 12 பேர் கொண்ட குழுவை அவர் அமைத்துள்ளார். இந்தக் குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டு, அதற்கேற்ப தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைக்க உள்ளது. “யாரும் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம், ஆனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரப்படும்” என்ற புதிய முறையை விஜய் முன்மொழிந்துள்ள போதிலும், பாஜக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளையும் தவிர்த்து ஒரு மாற்று அரசியலை முன்னெடுப்பதிலேயே அவர் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…