மருமகனோடு உல்லாசமாக இருந்த மாமியார்… அந்தக் கோலத்தில் நேரில் பார்த்த கணவன்… அடுத்து நடந்த பயங்கர சம்பவம்…!

Spread the love

தர்மபுரி மாவட்டம் எரங்காட்டு கொட்டாய் பகுதியில் கள்ளக்காதல் விவகாரத்தால் மருந்துக் கடை ஊழியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஆறுமுகம் (47) என்பவரது மனைவி ஜோதிக்கும் (45), அவரது மருமகனான ஆட்டோ ஓட்டுநர் சீதாராமனுக்கும் (33) இடையே தவறான உறவு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சீதாராமன் ஏற்கனவே ஆறுமுகத்தின் மூத்த மகளைத் திருமணம் செய்திருந்த நிலையில், மாமியாருடன் தொடர்ந்து வந்த இந்த கள்ளத்தொடர்பு குடும்பத்தில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

தங்கள் கள்ளக்காதலைத் தட்டிக் கேட்ட ஆறுமுகம் தங்களுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதிய ஜோதியும் சீதாராமனும், அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளனர். கடந்த ஜனவரி 7-ம் தேதி வேலைக்குச் சென்ற ஆறுமுகம் வீடு திரும்பாத நிலையில், அவரது மனைவி ஜோதியே போலீசில் புகார் அளித்து நாடகமாடியுள்ளார். இருப்பினும், விசாரணையில் மதிகோன்பாளையம் ஏரியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட ஆறுமுகம், கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டது பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

இந்தக் கொலை வழக்கு தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திய தர்மபுரி டவுன் போலீசார், மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்றதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தனர். ஆறுமுகத்தைக் கடத்திச் சென்று கல்லால் தாக்கி, பின்னர் ஏரியில் வீசிக் கொலை செய்த குற்றத்திற்காக மனைவி ஜோதி, மருமகன் சீதாராமன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த நண்பர்கள் 4 பேர் என மொத்தம் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உறவு முறைகளைச் சிதைக்கும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

ஏங்க எழுந்திரிங்க… நாம வீட்டுக்குப் போயிடலாம்… விபத்தில் இறந்த கணவனின் உடலைப் பிடித்து கதறிய மனைவி… திருவாரூரில் நடந்த சோகம்…!

திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…

13 minutes ago

அட கொடுமையே… பட்டாசு வெடித்தால் நிரந்தர பார்வை இழப்பு?… மருத்துவர்கள் விடுக்கும் அதிரடி எச்சரிக்கை… மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…

31 minutes ago

திக் திக்… மகளுடன் தனியாக இருந்த ஊழியர்… ஆத்திரத்தில் முதலாளி செய்த பகீர் காரியம்… பெங்களூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!

பெங்களூரில் நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவத்தில், தன் உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் கிரண் என்பவரை, தன் மகளுடன் வீட்டில் தனித்திருந்த…

35 minutes ago

என்னது… விஜய்யும் த்ரிஷாவும் ஒண்ணாவா?… ஜெகன் மோகன் ரெட்டி திருமணத்தில் நடந்த அதிரடி என்ட்ரி… உறைந்துபோன ரசிகர்கள்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ…!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…

55 minutes ago

“நவம்பர் 13-க்குப் பின் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் பூகம்பம்…. CM விஜய் ஆட்சிக்கே ஆபத்தா?”… திமுக-அதிமுக ரகசிய கூட்டணி?…. தலைமைச் செயலகத்தையே அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்….!

மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…

58 minutes ago