பெங்களூருவின் பன்னேருகட்டா பகுதி அருகே சி.கே. பாளையா சாலையில் அமைந்துள்ள ‘ஹலேவூரு கபாப் சென்டர்’ உணவகத்தில் அக்டோபர் 28 அன்று ஒரு அதிர்ச்சி விபத்து நிகழ்ந்தது. எலக்ட்ரானிக்ஸ் சிட்டியைச் சேர்ந்த சாஜினா பேகம் என்பவர் ஓட்டி வந்த மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் எஸ்.யு.வி கார், கடையில் புகுந்து பயங்கர விபத்துக்குள்ளானது. ஓட்டுநர் சாஜினா பேகம் திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு, பிரேக்கை மிதிப்பதற்குப் பதிலாக ஆக்ஸிலரேட்டரை மிதித்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து கபாப் கடைக்குள் வேகமாகப் பாய்ந்தது.
இந்த கோர விபத்தில், உணவகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதிய கார், சமையல் கவுண்டரைத் தள்ளிச் சென்றது. இதனால் அங்கு கொதித்துக் கொண்டிருந்த பெரிய பாத்திரத்தில் இருந்த சமையல் எண்ணெய் தூக்கி வீசப்பட்டு அங்கிருந்த ஊழியர் மற்றும் இரு வாடிக்கையாளர்கள் மீது கொட்டியது. இதனால் மூவரும் தீக்காயமடைந்த நிலையில் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
https://twitter.com/KeypadGuerilla/status/2117840711601242144/video/1
விபத்தின் போது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. விபத்து நடந்த நேரத்தில் மருத்துவச் செலவுகள் மற்றும் வாகனச் சேதங்களை ஏற்பதாக காரை ஓட்டி வந்த குடும்பத்தினர் உறுதியளித்ததாகவும், பின்னர் உரிய பணத்தைக் கொடுக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பன்னேருகட்டா காவல்துறையினர், காரைப் பறிமுதல் செய்து சாஜினா பேகத்திற்கு நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.
பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…
துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…
தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…
சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…