“நான் செத்தா விஜய் போட்டோவும் கூடவே புதைச்சிடுக”…. தளபதி மீது இப்படியொரு வெறியா?… தமிழக அரசியலில் வைரலாகும் தவெக பெண்ணின் ‘சென்டிமென்ட்’ பேச்சு…!

Spread the love

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மீதான அதீத பற்றை வெளிப்படுத்தும் வகையில் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பெண் நிர்வாகி ஒருவர் பேசிய உருக்கமான பேச்சு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. புளியங்குடி மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நகர மகளிர் அணி அமைப்பாளர் அருள்ஜோதி, மேடையில் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு தனது தளபதி மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.

அவர் பேசுகையில், தான் உயிருடன் இருக்கும்போதே ஒருமுறை விஜய்யைச் சந்தித்துவிட வேண்டும் என்பதே தனது வாழ்நாள் லட்சியம் என்று குறிப்பிட்டார். ஒருவேளை அந்த ஆசை நிறைவேறாமல் தான் இறக்க நேரிட்டால், தனது உடலை எரிக்காமல் புதைக்க வேண்டும் என்றும், அந்த குழியில் தனது தலைவர் விஜய்யின் புகைப்படத்தையும் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் உருக்கமான கோரிக்கையை வைத்தார். தனது குடும்பத்தினர் மறந்தாலும், தனது இறுதிப் பயணத்தில் தளபதி தன்னுடன் இருக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அவர் தெரிவித்தார்.

விஜய் மீதான தனது பக்தியை நிரூபிக்க, தனது கையில் அவரது பெயரைப் பச்சை குத்தியிருப்பதாகக் கூறிய அருள்ஜோதி, மற்றொரு விசித்திரமான கோரிக்கையையும் முன்வைத்தார். தனது குடும்ப ரேஷன் கார்டில் விஜய்யின் பெயரைச் சேர்க்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டதாகவும், அதற்கு அவர்கள் விஜய்யின் ஆதார் அட்டையைக் கேட்டதாகவும் தெரிவித்தார். எனவே, மேடையில் உள்ள நிர்வாகிகள் யாராவது விஜய்யின் ஆதார் அட்டை நகலை வாங்கித் தருமாறு அவர் மைக்கில் கேட்டது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தவெக மகளிர் அணியினரின் இத்தகைய அதீத செயல்பாடுகள் ஒருபுறம் தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தினாலும், மறுபுறம் அவை பேசுபொருளாகவும் மாறி வருகின்றன. ஏற்கனவே சில மாவட்டங்களில் பெண் நிர்வாகிகள் தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், புளியங்குடி அருள்ஜோதியின் இந்த “வித்தியாசமான” பற்று கலந்த கோரிக்கை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

3 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

4 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

4 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

4 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

4 மணத்தியாலங்கள் ago