அடுத்த அதிரடி…. அதிமுகவுடன் கூட்டணியை அறிவித்த பிரபல கட்சி…. செம குஷியில் எடப்பாடி…!

Spread the love

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் தலைமையில் நிர்வாகிகள் நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினர். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கதிரவன், வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், அவை தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிக அவசியமானவை என்றும் கதிரவன் புகழாரம் சூட்டினார். “எடப்பாடியார் ஒரு அருமையான தேர்தல் அறிக்கையைத் தயாரித்துள்ளார்; மக்களின் நாடித்துடிப்பை அறிந்து அவர் அளித்துள்ள வாக்குறுதிகள் நிச்சயமாக அவரை மீண்டும் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்கும்” என்று அவர் உறுதியாகத் தெரிவித்தார். இந்த ஆதரவு அறிவிப்பு, தென் மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற பார்வர்டு பிளாக் கட்சியின் வாக்கு வங்கியை அதிமுக பக்கம் திருப்ப உதவும் என்பதால், அரசியல் வட்டாரத்தில் இது ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“நீ எஸ்.சி.யா, பீஃப் சாப்பிடுவீயா…? வகுப்பறையில் கிண்டல் செய்த ஆசிரியர், சக மாணவர்கள்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற…

4 மணத்தியாலங்கள் ago

திக் திக் திக்… ஓட்டல் வெளியே தூங்கிக் கொண்டிருந்த… இளைஞர் மீது மர்ம நபர்கள் கொடூரத் தாக்குதல்… பீகாரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் நடந்துள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டல் வெளியே தூங்கிக் கொண்டிருந்த…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… போதையில் பறந்த சொகுசு கார்… தலைகீழாக கவிழ்ந்த தம்பதியின் வாகனம்… ஹைதராபாத்தில் பகீர் சம்பவம்…!

ஹைதராபாத்-வாரங்கல் தேசிய நெடுஞ்சாலையில் பீர்கேடிகுடா பகுதியில் நடந்த விபத்தில், மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 19 வயது இளைஞர்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ பாவம்… மோட்டாரை சுத்தம் செய்த ஹார்டுவேர் கடைக்காரர்… மின்சாரம் தாக்கி பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணா தாலுகாவில் உள்ள பைலக்குப்பே நகரில், தண்ணீர் மோட்டாரை சுத்தம் செய்யும் போது மின்சாரம் தாக்கி பிரகாஷ்…

5 மணத்தியாலங்கள் ago

“ஒரே ஜாடையில் இருந்ததால் மாற்றி கொன்னுட்டோம்…” பாரில் அரங்கேறிய கொடூரம்… சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

கிருஷ்ணகிரி அருகே உள்ள தனியார் பார் ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்த ஸ்டேஷனரி கடை உரிமையாளர் முகேஷ் (36) என்பவரின்…

5 மணத்தியாலங்கள் ago

“கணவரை இழந்த பெண்…” நண்பனை அழைத்து வந்த கள்ளக்காதலன்… இரண்டு பேருடன் ஏற்பட்ட பழக்கம்… கடைசியில் நடந்த பயங்கர சம்பவம்…!!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாலி கிராமத்தைச் சேர்ந்த சின்னராஜ் (26) என்பவர், கள்ளக்காதல் விவகாரத்தில் அவரது நண்பர்களாலேயே…

5 மணத்தியாலங்கள் ago