Categories: சினிமா

நம்மகிட்ட இதுதான் இல்ல, நமக்கு அதிகமா தேவைப்படுறது இதுதான்.. தவெக தலைவர் விஜய் சொல்றத பாருங்க..

Spread the love

தமிழக வெற்றி கழகம் சார்பாக கல்வி விருது வழங்கும் விழா தொடங்கி நடைபெற்ற வரும் நிலையில் நடிகர் விஜய் மாணவர்களுக்கு சில அறிவுரைகளை கூறியிருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வரும் நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை தொடங்கியிருக்கின்றார். இந்த கட்சி வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கின்றது. இந்த கட்சியின் தலைவராக பொறுப்பு வகிக்கும் நடிகர் விஜய் தலைமையில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர், மாணவியர்களுக்கு பரிசு வழங்கும் விழா இன்று நடைபெற்று வருகின்றது.

முதற்கட்டமாக இன்று சென்னை திருவான்மையூரில் இருக்கும் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் விஜய் முதலில் மாணவர்களுடன் மாணவர்களாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் மேடை ஏறி பேசிய அவர் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். முதலில் மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த நடிகர் விஜய் தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர்களின் தேவை இருக்கின்றது.,

அரசியல் மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறி இருக்கின்றார். மருத்துவம், பொறியியல் படிப்பு மட்டுமே படிப்பு அல்ல, மற்ற எல்லா துறைகளிலும் நல்ல தலைவர்கள் இருக்க வேண்டும். செய்தி வேறு கருத்து வேறு என்பதை புரிந்து கொண்டால் பொய் பரப்புரைகளை நாம் எளிதில் கண்டறியலாம். தமிழ்நாட்டிற்கு நல்ல தலைவர்களின் தேவை இருக்கின்றது.

அரசியல் மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அது தேவை. நாம் ஒரு துறையை தேர்ந்தெடுக்கும் போது அதில் எவ்வளவு டிமாண்ட் இருக்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மருத்துவம், பொறியியல் மட்டுமே நல்லதுறை என்று கூறி விட முடியாது. உலக தரத்தில் மருத்துவர்கள் பொறியாளர்கள் வக்கீல்கள் அதிக அளவில் இருக்கிறார்கள்.

இங்கு நம்மிடம் என்ன இல்லை என்றால் நம்மிடம் எது அதிக தேவை என்றால் நல்ல தலைவர்கள். நான் அரசியலை மட்டும் கூறவில்லை. நீங்கள் ஒரு துறைக்கு செல்கிறீர்கள் என்றால் அங்கு நீங்கள் சிறந்து விளங்கினீர்கள் என்றால் உங்களால் ஒரு தலைமை இடத்திற்கு செல்ல முடியும், அதை தான் நான் கூறினேன். நமக்கு இன்னும் நிறைய தலைவர்கள் வேண்டும் என்று பேசியிருந்தார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Mahalakshmi

Recent Posts

“ஷாருக்கான் மிஸ் ஆனா என்ன… அடுத்து மோடி தான்…” கெத்து காட்டும் ஆஸ்கர் இயக்குநர்… இணையத்தில் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…!

ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் கெவின் மக்டொனால்ட், பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மையமாக வைத்து ஒரு ஆவணப்படம் எடுக்க சில…

1 மணத்தியாலம் ago

வாழ்நாள் முழுவதும் பிச்சை… வீட்டில் 30 சாக்கு மூட்டைகளில் பல லட்சங்கள்… இறந்த மூதாட்டியின் சீக்ரெட் அம்பலம்… மிரண்டுபோன மக்கள்…!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த நூர் என்ற 68 வயது மூதாட்டி, அப்பகுதியில் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…

1 மணத்தியாலம் ago

அச்சோ… என்ன ஒரு பாசம்… கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து… அம்மாவுக்காக டிவி வாங்கி கொடுத்த டெலிவரி பாய்… நெகிழ்ச்சியான தருணம்… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!

ஸ்விக்கி நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வரும் இளைஞர் ஒருவர், தனது கடின உழைப்பால் கிடைத்த வருமானத்தில் இருந்து சிறுகச்…

1 மணத்தியாலம் ago

தவறான கைது…! 19 நாள் சிறை… ஜப்பானில் இருந்துகொண்டே கர்நாடக அரசை பணிய வைத்த இளைஞர்… பெங்களூரு போலீஸ் செய்த அநீதி…!!

பெங்களூருவில் கடந்த 2019-ம் ஆண்டில் ஆங்கிலம் பயில வந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோதோஷி தனகா, தான் படித்த கல்வி…

1 மணத்தியாலம் ago

பொட்டு வைக்கக்கூடாதா?… “என் அம்மாவுக்கு நடந்த அந்த கொடுமை”… கண்ணீருடன் சமூகத்தை சாடிய நடிகை அனசுயா… இணையத்தில் வெடித்த சர்ச்சை…!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி, தெலுங்குத் திரையுலகில் 'புஷ்பா', 'ரங்கஸ்தலம்', 'க்ஷணம்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் முன்னணி…

2 மணத்தியாலங்கள் ago

சைக்கோவா இவள்?… ரத்த வெள்ளத்தில் கணவன்…உடலை கூறுபோட்ட கொடூரம்… ஹரியானாவை உலுக்கிய பகீர் சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி விம்லா…

2 மணத்தியாலங்கள் ago