#image_title
நடிகர் விஜயின் கல்வி விருது வழங்கும் விழாவில் பெண் ஒருவர் பாட்டு பாடிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக பலம் வரும் நடிகர் விஜய் இன்று மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை வழங்கி வருகின்றார். தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் சினிமாவிலிருந்து தற்போது அரசியலில் கால் பதிக்க இருக்கின்றார். தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கியிருக்கும் நடிகர் விஜய் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கின்றார்.
இதற்காக தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து வருகின்றார். அதுமட்டுமில்லாமல் சினிமாவில் நடித்து வரும் இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இதனை தொடர்ந்து அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேரமும் அரசியலில் கவனம் செலுத்த உள்ளதாக கூறியிருக்கிறார்.
நடிகர் விஜயின் ரசிகர்கள் பலரும் இனி சினிமாவில் அவரை பார்க்க முடியாதா என்று வருத்தத்தில் இருந்தாலும், தமிழகத்திற்கு ஒரு நல்ல தலைவர் கிடைப்பார் என்ற சந்தோஷத்தில் இருந்து வருகிறார்கள். கடந்த வருடம் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாணவ, மாணவியர்களுக்கு ஊக்க தொகையும் சான்றிதழ்களும் வழங்கி இருந்த நிலையில் இந்த முறை தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக பள்ளி மாணவர்களுக்கு உதவி தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி வருகின்றார்.
இன்று முதற்கட்டமாக சென்னை திருவான்மையூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. முன்னதாக பேசிய விஜய் மாணவ, மாணவியர்களுக்கு பல அறிவுரைகளை கூறினார். அரசியல் குறித்தும் பல விஷயங்களை பேசியிருந்தார். நாட்டிற்கு நல்ல தலைவர்கள் வேண்டும் என்றும் அரசியல் மட்டும் இல்லாமல் எல்லா துறைகளிலும் நல்ல தலைவர்கள் அதிலும் படித்த இளைஞர்கள் தலைவர்களாக இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
மேலும் இளைஞர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அதை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கி வருகின்றார். இதைத்தொடர்ந்து மேடைக்கு வந்த பெண் ஒருவர் நடிகர் விஜயின் வாங்கண்ணா வணக்கங்கண்ணா என்ற பாடலை மிக சிறப்பாக பாடியிருந்தார். அதில் சில வரிகளை மாற்றி நடிகர் விஜய்க்கு ஏற்றார் போல் பாடி இருந்தது. அங்கு இருந்த அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் வகையில் இனி மாதத்தில் ஒருநாள் 'No Bag Day'…
மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், எலும்பியல் மருத்துவரான யோகேந்திர ஜெய்ஸ்வால் மீது நோயாளியின் மகன்…
நியூயார்க்கின் புரூக்ளின் பகுதியில் பீட்சா விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த 28 வயதான இந்திய இளைஞர் குர்தீப் சிங், ஈவு…
உன்னாவ் பகுதியில் இ-ரிக்ஷா ஒன்றை ஓரமாக நிறுத்துவது அல்லது அகற்றுவது தொடர்பாக, பணியில் இருந்த ஹோம் கார்டு காவலருக்கும் இ-ரிக்ஷா…
பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள அகரா ஏரியில், நகைக்கடையில் பணியாற்றி வந்த 22 வயது பெண் வாணிஸ்ரீ சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.…
டேராடூனைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், 'டாக்டர் ரியால்டர்' என்ற நிறுவனத்தில் சுமார் மூன்று ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய நிலையில், சொந்தமாகத்…