Categories: சினிமா

மிகப்பிரம்மாண்டமாக மகளின் பெயர் சூட்டு விழாவை நடத்திய சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக் .. வைரலாகும் வீடியோ..!

Spread the love

சீரியல் நடிகையான ஸ்ரீதேவி அசோக்குமார் தனது இரண்டாவது குழந்தைக்கு மிக பிரம்மாண்டமாக பெயர் சூட்டு விழா நடத்திய வீடியோவானது இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான சின்னத்திரை நடிகையாக வளம் வருபவர் ஸ்ரீதேவி அசோக். இவர் 2004 ஆம் ஆண்டு வெளியான புதுக்கோட்டையிலிருந்து சரவணன் என்கின்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு வெள்ளித்திரையில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதனால் சின்னத்திரை பக்கம் வந்த இவர் மிகச் சிறந்த நடிகையாக வலம் வருகின்றார். முதன் முறையாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் அறிமுகமான இவர் தற்போது ஏராளமான சீரியல்களில் நடித்திருக்கின்றார். முப்பதுக்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கும் ஸ்ரீதேவி அசோக் ராஜா ராணி சீரியல் மூலமாக தான் மிகப் பிரபலமானார்.

இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மோதலும் காதலும் என்ற சீரியலில் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். அதைத்தொடர்ந்து பொன்னி சீரியலிலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். கர்ப்பமாக இருந்த நிலையில் கூட தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த இவர் டெலிவரி காரணமாக சீரியலில் இருந்து விலகினார்.

தற்போது இரண்டாவதாக பெண் குழந்தையை பெற்றெடுத்திருக்கின்றார். இந்த குழந்தைக்கு சிருஷ்டி என பெயர் வைத்திருக்கிறார். குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகப்போகும் நிலையில் சமீபத்தில் தான் குழந்தையின் முகத்தை வெளி உலகத்திற்கு காட்டியிருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது உறவினர்கள் நண்பர்கள் மற்றும் சில பிரபலங்களை அழைத்து தனது மகளுக்கு பெயர் சூட்டு விழாவை நடத்தி இருக்கின்றார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

Mahalakshmi

Recent Posts

அடச்சீ… நீயெல்லாம் ஒரு மனுஷனா… நள்ளிரவில் நடுத்தெருவில் தவித்த சிறுவன்… தந்தையே செய்த கொடூர செயலா?… ஃபதேகஞ்சில் பதறவைக்கும் சம்பவம்…!

ஃபதேகஞ்ச் பகுதியில் நள்ளிரவில் வீதியோரம் ஆதரவற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் ஒருவன், பொதுமக்களின் உதவியுடன் தற்போது அப்பகுதியில் உள்ள காவல்…

4 minutes ago

ஐயோ… தூக்க மயக்கத்துல விழுந்துட்டானே… கங்கை நீர் எடுத்துட்டு திரும்பிய… பக்தருக்கு நேர்ந்த கொடூரம்… டிராக்டர் சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து பலி… பதறவைக்கும் சம்பவம்…!

காஸ்கஞ்ச் பகுதியில் கங்கையில் நீராடி, புனித நீர் எடுத்துக்கொண்டு டிராக்டர் டிராலியில் திரும்பிக் கொண்டிருந்த காவடி பக்தர்கள் குழுவில் ஒரு…

13 minutes ago

என் சாவுக்கு யாரும் காரணமில்லை… நீ சந்தோஷமா இரு… ராகி பண்டிகைக்கு முன்… இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்… சங்காரெட்டியில் அதிர்ச்சி சம்பவம்…!

சங்காரெட்டி பகுதியில் இளம்பெண் ஒருவர் எழுதிய உருக்கமான தற்கொலை கடிதம் மீட்கப்பட்டு, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. "எனக்கு வாழ நம்பிக்கை…

23 minutes ago

அட கடவுளே… பள்ளிவாசல் வாசலில் பிச்சை எடுத்த மூதாட்டி மரணம்… வீட்டை தொறந்தா சாக்கு மூட்டை நிறையா காசு… உறவினர்கள் செய்த அதிர்ச்சி காரியம்…!

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பள்ளிவாசல் வாசலில் பல ஆண்டுகளாகப் பிச்சை எடுத்து வந்த ஹூர் என்ற மூதாட்டி சமீபத்தில் காலமானார்.…

28 minutes ago

ஐயோ… ஆன்லைன் பேமெண்ட் ஆயிடுச்சு அண்ணா… போலி ஸ்கிரீன்ஷாட் காட்டி ஏமாற்ற பார்த்த ஜோடி… ஸ்பாட்டிலேயே வச்சு வச்சுச் செய்த கடைக்காரர்…!

ஒரு காதலனும் காதலியும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, அந்தப் பெண் சிகரெட்டும் குளிர்பானமும் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து, பாழடைந்த…

39 minutes ago

“73 நாள் எச்சரிக்கை… பலித்த ஜோதிடம்”… கோட்டைப் பக்கமே வராதீங்க…. ஜோதிடருக்கு ரெட் கார்டு கொடுத்த விஜய்?…. பின்னணியில் வெளியான பரபரப்பு உண்மை..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதல்வருமான விஜய் மற்றும் அவரது ஆஸ்தான ஜோதிடராக அறியப்படும் ராதன் பண்டிட் ஆகியோருக்கு இடையேயான…

50 minutes ago