தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அதிமுக பல வியூகங்களை வகுத்து வரும் நிலையில் மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பலரும் குரல் எழுப்பி வருகிறார்கள். அதன்படி NDA கூட்டணியில் இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கூட்டணியில் இணைய மாட்டோம் என டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் கூறி வருகிறார்கள் . தற்போது அவர்கள் இருவருமே பாஜகவுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வரும் நிலையில் கூட்டணி குறித்து அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமல் உள்ளது.
இந்நிலையில் பொங்கலுக்கு முன்னதாக தமிழக வெற்றி கழகம் கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் இணைவார்கள் என்று தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பெருந்துறை தொகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக்கலகம் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். பிறகு செய்தியாளர்களிடம், ஈரோடு மாவட்டத்தின் 8 தொகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறும் என்று கூறியுள்ளார்.
