விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த கீழக்கொந்தை கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவருடைய மனைவி சாந்தி. இந்த தம்பதியின் மூத்த மகளான சுபஸ்ரீ (17) என்பவர் சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சுபஸ்ரீ தன்னுடைய வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் சாந்தி வீட்டில் உள்ள துணியை துவைக்க வேண்டும் என்றும் சமைக்க வேண்டும் எனவும் தனது மகளிடம் கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த சுபஸ்ரீ வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுபஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
