நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றார். தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகின்றார். அதிலும் குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதை அவருடைய குறிக்கோளாக உள்ளது . அதேசமயம் திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் விஜய் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணைய வேண்டிய சூழலும் உருவாகியுள்ளது.
அப்படி செய்தால் மட்டுமே திமுகவை அவரால் தோற்கடிக்க முடியும். இல்லையென்றால் ஓட்டுக்களை விஜய் பிரித்து அதை திமுகவுக்கு சாதகமாகவே அமையும். திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றன. அதாவது திமுக எதிர்ப்பு ஓட்டுகள் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு போனால் அந்த ஓட்டுக்கள் அதிமுகவிற்கு கிடைக்காமல் போகும் என்பது தான் கணிப்பு. ஆனால் விஜய் இதுவரை அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணையவில்லை.
அதே சமயம் திமுகவை மட்டும் கடுமையாக விமர்சித்து வருகின்றார். எந்த மேடையிலும் அவர் அதிமுகவை பற்றியும் பாஜகவை பற்றியும் பேசுவது இல்லை. ஈரோடு பொதுக்கூட்டத்தில் இதற்கு விளக்கம் அளித்த விஜய், நாங்கள் களத்தில் இருப்பவர்களை மட்டுமே எதிர்ப்போம் என்று கூறி இருந்தார். ஆனால் அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் உள்ள நிலையில் விஜய் களத்தில் என்று யாரை சொல்கிறார் என்று தெரியவில்லை.
இந்நிலையில் இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜயின் அரசியலை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆர் எஸ் எஸ் ஆல் அழைத்து வரப்பட்ட வழிநடத்தப்படுகின்ற விஜய் இந்த மண்ணுக்கு ஆபத்து என்பதால்தான் அவரை நான் எதிர்கின்றேன். ஆர் எஸ் எஸ் இன் அனுபவம், சூழ்ச்சி மற்றும் பயங்கரவாத சிந்தனை முன்பு அரசியல் பின்னணியே இல்லாத விஜய் பலியாகி விடுவார் என்று ஜேம்ஸ் வசந்தன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
