“திராவிட மாடல் அல்ல, சாரிமா மாடல் சர்க்கார்”… ஸ்டாலினை விளாசும் TVK தலைவர் விஜய்…!

By Nanthini on ஆடி 13, 2025

Spread the love

அரசியல் கட்சி தொடங்கிய பிறகு தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் முதல் முறையாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியான அஜித்குமார் நகை திருட்டு வழக்கில் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு விஜய் ஆறுதல் தெரிவித்திருந்தார்.

இப்படியான நிலையில் அஜித்குமார் மரண வழக்கை உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வலியுறுத்தியும் காவல்துறை விசாரணை மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடந்து வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கருப்பு பணிய நனைந்து வந்துள்ள விஜய் திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகிறார்.  தமிழகத்தில் தற்போது நடப்பது திராவிட மாடல் அரசு அல்ல “சாரிமா மாடல் சர்க்கார்”என்று விஜய் சாடியுள்ளார். திருபுவனம் அஜித் குமாரின் குடும்பத்திடம் கேட்பது போல மீதமுள்ள 23 குடும்பத்திடம் மன்னிப்பு கேட்பதோடு நிதி உதவியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.