“SORRY வேண்டாம் நீதி வேண்டும்”… முதல்வர் பதவி விலகல்?.. கருப்பு பணியன், கோபமான முகத்துடன் போராட்டத்தில் விஜய்..!

By Nanthini on ஆடி 13, 2025

Spread the love

அரசியல் கட்சி தொடங்கிய பிறகு தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் முதல் முறையாக இன்று ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளியான அஜித்குமார் நகை திருட்டு வழக்கில் காவல்துறையால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு விஜய் ஆறுதல் தெரிவித்திருந்தார்.

இப்படியான நிலையில் அஜித்குமார் மரண வழக்கை உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வலியுறுத்தியும் காவல்துறை விசாரணை மரணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட தமிழ்நாடு அரசை வலியுறுத்தியும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடந்து வரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கருப்பு பணிய நனைந்து வந்துள்ள விஜய் திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகிறார். Sorry வேண்டாம் நீதி வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியபடி நிற்கும் விஜய் பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நீதி கேட்டு வருகிறார்.

   

மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டுமென தமிழக வெற்றி கழகம் கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் வலியுறுத்தியுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. காவல் கஸ்டடி மரணத்திற்கு முழு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும் அவரது கட்டுப்பாட்டில் உள்ள உள்துறையை வேறு அமைச்சருக்கு வழங்க வேண்டும் என கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் வலியுறுத்தினார்.