இபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சி…. செங்கோட்டையன் எடுத்த அதிரடி முடிவு…. தமிழக அரசியலில் புதிய புயல்…..!

Spread the love

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் போட்டியிடுவதற்கான முதற்கட்டப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தவெக சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான விருப்பமனு விநியோகம் நாளை முதல் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தற்போது தவெகவின் நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகிக்கும் முன்னாள் அமைச்சர்  செங்கோட்டையன் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். வரும் சட்டசபைத் தேர்தலில் தான் மீண்டும் கோபிசெட்டிபாளையம் தொகுதியிலேயே போட்டியிடப் போவதாக அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். தவெகவின் குரல் இன்று தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலிப்பதாகவும், விஜய்யின் இலக்கு தமிழகத்தை ஒரு சிறந்த மாநிலமாக மாற்றுவதுதான் என்றும் அவர் புகழ்ந்து பேசியுள்ளார்.

அதிமுகவில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய தன்னை, கட்சியில் ஒற்றுமை நிலவ வேண்டும் என்று குரல் கொடுத்த ஒரே காரணத்திற்காக எடப்பாடி பழனிசாமி நீக்கியதாக செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். 234 தொகுதிகளிலும் விஜய் யாரைக் கை காட்டுகிறாரோ அவரே எம்.எல்.ஏ-வாக வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய அவர், தமிழகத்தை ஆளப்போவது தவெக தான் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கோபிசெட்டிபாளையம் தொகுதி கடந்த காலங்களில் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட நிலையில், அங்கு சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.எல்.ஏ-வாக இருந்த செங்கோட்டையன் தற்போது தவெக சார்பில் களமிறங்குவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெக தனித்துப் போட்டியிடுமா என்பது குறித்துப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், “மௌனம் வெற்றியின் அறிகுறி” எனத் தெரிவித்து தனது அரசியல் நகர்வுகளைத் தொடர்ந்து வருகிறார்.

Nanthini

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

2 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

2 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

2 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

3 மணத்தியாலங்கள் ago