வன்னியர் + கவுண்டர் வாக்குகள் தான் டார்கெட்…. விசிகவை சைலன்ட்டாக ஓரங்கட்டும் தவெக…. இடைத்தேர்தலில் விஜய் போட்ட ரகசிய கணக்கு அம்பலம்…!

Spread the love

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் தவெக, திமுக, அதிமுக என முக்கோணப் போட்டியால் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் தேதிகள் நெருங்கும் வேளையில், பிரச்சாரப் பணிகளும் வியூகங்களும் வேகம் எடுத்துள்ளன. இந்த இரு தொகுதிகளிலுமே வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதில் சாதிய மற்றும் சமூக ரீதியிலான வாக்கு வங்கியே மிக முக்கியப் பங்காற்றும் என்பதால், அனைத்துக் கட்சிகளுமே தீவிரக் கணக்குகளைப் போட்டு களமிறங்கியுள்ளன.

ஆளும் தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்த நாள் முதல், தலித் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் அரசாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. அமைச்சரவையில் 8 தலித் அமைச்சர்களுக்கு இடம் அளித்திருப்பதை கட்சித் தலைவர் விஜய் பெருமிதத்துடன் குறிப்பிட்டு வந்த நிலையில், அதற்கு தலித் மக்களிடையே பரவலான வரவேற்பும் கிடைத்தது. இருப்பினும், இடைத்தேர்தல் நடக்கும் மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமூக வாக்குகளும், தாராபுரம் தொகுதியில் கொங்கு வேளாளர் கவுண்டர் சமூக வாக்குகளும் அதிகளவில் உள்ளன. பாமக இத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என அறிவித்துள்ளது தவெகவுக்கு சாதகமாகப் பார்க்கப்பட்டாலும், அப்பகுதிகளின் பெரும்பான்மைச் சமூக வாக்குகளைக் கவர தவெக சிறப்பு வியூகங்களை வகுத்து வருகிறது.

இந்தச் சூழலில், சமூக ரீதியிலான வாக்குகளைக் அறுவடை செய்ய ஆளுங்கட்சியான தவெக தனது கூட்டணிக் கட்சியான விசிகவை பிரச்சாரக் களத்தில் சற்று தள்ளி வைப்பதாகப் பரவலாகப் பேசப்படுகிறது. தவெக தலைவர் விஜய்யுடன் விசிக தலைவர் திருமாவளவன் மேடையேற மேற்கொண்ட முயற்சிகளுக்கு விஜய் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தவெகவின் தலைமை பிரச்சார வாகனத்திலோ அல்லது வேட்பாளர்களின் பிரச்சார வாகனங்களிலோ விசிக, காங்கிரஸ், ஐயூஎம்எல், மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் கட்டப்படவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

கூட்டணியில் இருந்தபோதிலும், விசிகவை தவெக திட்டமிட்டே ஒதுக்கி வைக்கிறதா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. விசிக தாமாகவே முன்வந்து பிரச்சாரக் கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், அந்தக் கூட்டங்களிலும் தவெகவின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் பெரும்பான்மைச் சமூகங்களின் வாக்குகளை இழந்துவிடக் கூடாது என்பதற்காகவே, விசிகவை பிரச்சாரத்தில் பெரியளவில் முன்னிறுத்தாமல் தவெக விலகியே இருக்கிறது என்ற பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“புலி இப்போது ‘பல் இழந்த புலி’ ஆனது எப்படி?… அமெரிக்க தேர்தலின் யாரும் எதிர்பாராத மறுபக்கம்”…. இனி டிரம்ப் ஒன்னுமே செய்ய முடியாதா?….!

அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…

7 minutes ago

“புர்ஜ் கலிஃபா உயரத்திற்கு ஒரு எஸ்கலேட்டர்… மேலே போனா கீழே இறங்க வழியில்லையா?”…. வெளிநாட்டுப் பெண்மணிக்கு நடந்த பகீர் அனுபவம்… வைரல் வீடியோ….!

உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் சுவாரஸ்யமான நகரப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக ஹாங்காங்கில் உள்ள 'சென்ட்ரல் மிட் லெவல்ஸ் எஸ்கலேட்டர்'…

17 minutes ago

ரூ.4,730 கோடி ஆற்று மணல் கொள்ளை…. விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு… சிக்கிய முக்கிய ஆவணங்கள்…. தமிழகத்தையே உலுக்கும் புதிய எஃப்.ஐ.ஆர்…!

தமிழகத்தில் அரசு ஆற்று மணல் குவாரிகளில் நடைபெற்ற மாபெரும் முறைகேடு தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய முதல் தகவல் அறிக்கையின்…

23 minutes ago

கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.25 லட்சம்னு ஏலம் விடுறாங்க…. ரூ.15 கோடி பேரம் விவகாரம்…. அதிர வைக்கும் ஆடியோ பின்னணி…. செல்லூர் ராஜூவின் செம அடி….!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா மற்றும் தவெக அரசை கடுமையாக விமர்சித்து…

30 minutes ago

“விஜய் அமைதியா இருக்கார்னா சும்மா இல்லை.. மாஸ் பிளான் பண்றாரு”…. இனிதான் இருக்கு கச்சேரி…. மேடையில் போட்டுடைத்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா….!

அரசியல் களத்தில் தனக்கெனத் தனிப்பாதையை அமைத்து, மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த தமிழக வெற்றி கழகம் அரியணை ஏறி…

36 minutes ago

அடச்சீ நீயெல்லாம் ஒரு தாயா?….. பெற்ற மகளுக்கே தாயே செய்த காரியம்.. 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை….. அதிர்ச்சியில் உறைந்த ஆவடி….!

சென்னை ஆவடி பகுதியில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.…

41 minutes ago