வங்கி ஊழியர்களின் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அறிவிக்கப்பட்டிருந்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இன்று அனைத்து பொதுத்துறை வங்கிகளும் வழக்கம் போல் இயங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாள்கள் மட்டுமே வேலை பார்க்கும் நடைமுறை, பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வங்கி ஊழியர் சங்கங்கள் இந்த போராட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தன. இதனால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்படும் என்ற சூழல் நிலவிய நிலையில், வாடிக்கையாளர்களின் சிரமத்தைக் தவிர்க்கும் வகையில் அவசரப் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன.
நேற்று இரவு நடைபெற்ற சுமுகமான பேச்சுவார்த்தையின் முடிவில், வாரத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிப்பது குறித்த கோரிக்கையில் முக்கிய உடன்பாடு எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வங்கி ஊழியர் சங்கங்கள் தங்களது ஸ்டிரைக் முடிவை இரவோடு இரவாகத் திரும்பப் பெற்றுக் கொண்டன. பேச்சுவார்த்தை வெற்றி பெற்றுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எவ்வித சிரமமும் இன்றி இன்றே வங்கிகளுக்குச் சென்று தங்களது பணப் பரிவர்த்தனைகள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…