தேனி மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மகளிர் அணி தலைமை என்ற பெயரில், அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்குள் சென்று ஆய்வு செய்வது போல் சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வீடியோக்கள் வெளியாகி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையிலும், கட்சியின் பெயரைப் பயன்படுத்தி அரசு நிர்வாகங்களில் தலையிடுவது போன்ற தோற்றத்தை உருவாக்குவது அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்ச்சையின் பின்னணியில் தேனி மாவட்ட தவெக நிர்வாகியான அஜிதா தெய்வேந்திரன் என்பவர் இருப்பதாகக் கூறப்படுகிறது. தன்னை ‘தேனி வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைமை’ என்று கூறிக்கொள்ளும் இவர், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்று ஆட்சியரைச் சந்திப்பது, மகளிர் குழுக்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளைச் சந்தித்து குறைகளைக் கேட்பது போன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரீல்ஸாகப் பதிவிட்டு வந்துள்ளார். குறிப்பாக, தேனி அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) ஆய்வு நடத்தியபோது, அவர்களுடன் சென்று தானும் ஆய்வு செய்வது போல் வீடியோ எடுத்து, தவெக தலைமைக்கு ‘டேக்’ செய்திருப்பது விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத தவெக கட்சியினர் சிலர், அரசு அலுவலகங்களுக்குள் சென்று ஆய்வு நடத்துவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், தேனியிலும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இத்தகைய செயல்கள் தொடர்வது அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ் அதிரடியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தேனி வடக்கு மாவட்ட மகளிர் அணி தலைமை என்று அதிகாரப்பூர்வமாக யாரையும் கட்சித் தலைமை நியமிக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். மேலும், கட்சியின் பெயர் மற்றும் பொறுப்புகளைத் தவறாகப் பயன்படுத்தி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களை அணுகுவது அப்பட்டமான விதிமீறல் என்றும், அவ்வாறு கட்சியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனது அறிக்கையில் அவர் எச்சரித்துள்ளார்.
சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…
மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…
தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…
தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…