தமிழக வெற்றிக் கழகத்தின் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் வீராசாமி, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ₹1.30 லட்சம் வாங்கிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். லஞ்சமில்லாத தூய்மையான ஆட்சியை அமைப்பதே தங்களின் இலக்கு என முதல்வர் விஜய் தொடர்ந்து முழங்கி வரும் வேளையில், அவரது கட்சி நிர்வாகியே இது போன்ற புகாரில் சிக்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதனை ஆயுதமாக கையில் எடுத்துள்ள திமுக மற்றும் அதிமுகவினர், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் லஞ்சத்தில் திளைப்பதாகக் கூறி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். முன்னதாக, சர்ச்சைக்குரிய அந்தப் பணம் லஞ்சம் அல்ல என்றும், நண்பர் என்ற முறையில் அவசரத் தேவைக்காகப் பெறப்பட்ட கைமாற்றுப் பணம் மட்டுமே என்றும் வீராசாமித் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்த போதிலும், கட்சித் தலைமை இந்த ஒழுங்கு நடவடிக்கை முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
