தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் புதிதாக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. வழக்கமாக மாதத்திற்கு சராசரியாக 24,464 பேர் மட்டுமே பதிவு செய்து வந்த நிலையில், கடந்த மே மாதத்தில் மட்டும் ஒரே மாதத்தில் புதிதாக 76,245 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதன் மூலம் மொத்தப் பதிவாளர்களின் எண்ணிக்கை 1,54,292 ஆக உயர்ந்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதந்தோறும் ₹4,000 உதவித்தொகை வழங்கப்படும் என அதன் தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டதே இந்தத் திடீர் மாற்றத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த கவர்ச்சிகரமான வாக்குறுதியால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்கள், வருங்காலத்தில் தங்களுக்கு இந்த உதவித்தொகை தடையின்றிக் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தங்களது பெயர்களை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் போட்டிப்போட்டுக் கொண்டு பதிவு செய்து வருகின்றனர்.
