2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் களம் தயாராகி வரும் நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் செயற்குழு கூட்டத்தை கூட்டினார். அதில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். யாருடனும் கூட்டணி இல்லை என்று நேரடியாகவே சொல்லி விட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் விஜய் கட்சியில் 1 கோடி உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டதாக தவெக தரப்பில் தெரிவிக்கப்படும் நிலையில், 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க அந்த கட்சி திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15 அன்று இரண்டாம் கட்ட உறுப்பினர் சேர்க்கையை விஜய் தொடங்கிவைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, ‘My TVK’ என்ற செயலியையும் அவர் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.
