2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தமிழக அரசியல் களம் தயாராகி வரும் நிலையில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் சமீபத்தில் செயற்குழு கூட்டத்தை கூட்டினார். அதில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். யாருடனும் கூட்டணி இல்லை என்று நேரடியாகவே சொல்லி விட்டார். 2026 சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் “தமிழகத்தில் இனி இலவசம் கிடையாது. முதல்வர் விஜய் அறிவிப்பு” என்ற போஸ்டர் வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த இணையவாசிகள், “எல்லை மீறி போறீங்க” என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதற்கு காரணம் தமிழக வெற்றிக் கழகத்தினர் அல்ல. இது ‘யாதும் அறியான்’ என்ற பட டிரெய்லரில் இடம்பெற்றுள்ள போஸ்டர். இதுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த படத்தில் கோபி இயக்கத்தில் அப்புக்குட்டி, தம்பி ராமய்யா, பிரானா உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.
