தாத்தாவாக நடித்த நடிகருடனே ஜோடி போட்டு நடித்த ஸ்ரீதேவி.. அதுவும் இவ்வளவு வயது வித்தியாசமா?.. சினிமாவில் யாருமே செய்யாத சாதனை..!

By Nanthini on ஆடி 9, 2025

Spread the love

கடந்த 1972 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் தான் படி பந்தலு. சந்திரசேகர் ரெட்டி இயக்கியிருந்தா இந்த படத்தில் என்டி ராமராவ் தலைமை ஆசிரியராக நடிக்க அவரின் மனைவியாக அஞ்சலி தேவியும் மகனாக கிருஷ்ணன் ராஜூவும் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ஸ்கூல் மாஸ்டர் என்ற தெலுங்கு திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தில் நடித்ததற்காக என் டி ராமராவுக்கு பல விருதுகளும் கிடைத்தது. இந்த திரைப்படத்தில் எண்டி ராமராவின் பேத்தியாக அதாவது குழந்தை நட்சத்திரமாக நடிகை ஸ்ரீதேவி நடித்திருந்தார். அப்போது ஸ்ரீதேவியின் வயது 9 தான். இதனைத் தொடர்ந்து 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு திரைப்படம் தான் வேட்டக்காடு.

தாத்தாவாக நடித்த அதே நடிகருக்கு ஜோடியான ஸ்ரீதேவி: தென் இந்திய சினிமாவில்  பேசுபொருளான வயது வித்தியாசம்

   

ராகவேந்திர ராவ் இயக்கிய இந்த திரைப்படம் நிஷானா என்ற ஒரு இந்தி திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இது ஒரு வேட்டைக்காரனின் கதையாகும். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக என்.டி ராமராவ் நடிக்க அவருக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் ஸ்ரீதேவி நடித்திருந்தார். அப்போது ராமராவுக்கு 56 வயதில் இருந்த நிலையில் ஸ்ரீதேவியின் வயது என்னவோ 16 தான். நடிகை ஸ்ரீதேவி சினிமாவில் பல சாதனைகளை நிகழ்த்தி இருந்தாலும் தன்னைவிட 40 வயது மூத்தவருடன் அதாவது தாத்தாவாக நடித்த நடிகருடன் ஜோடியாக நடித்து அந்தத் திரைப்படத்திலும் சாதனை படைத்தார். சினிமாவில் இவ்வளவு வயது வித்தியாசத்தில் யாருமே நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.