“தெரியாம இங்க வந்துட்டோமா?”…. அதிமுக மாஜிக்களை கதற விடும் விஜய்…. தவெகவில் வெடித்த புதிய சர்ச்சை…. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

By Nanthini on ஆடி 31, 2026

Spread the love

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அரை நூற்றாண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை வீழ்த்தி, தனது முதல் தேர்தலிலேயே ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து சாதனை படைத்தது தமிழக வெற்றிக் கழகம். இத்தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஜெயலலிதா மறைவுக்குப் பின் தொடர் பின்னடைவைச் சந்தித்து வரும் அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களும் 6 சட்டமன்ற உறுப்பினர்களும் தவெகவில் இணைந்தனர். ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து நிகழ்ந்த இந்த அதிரடி அரசியல் தாவல்கள், மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

பெரிய எதிர்பார்ப்புகளுடனும், கட்சியில் முக்கியப் பொறுப்புகளைப் பெறலாம் என்ற கணக்குடனும் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் நிர்வாகிகளுக்கு தற்போது வரை ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இடைத்தேர்தல் நடத்துவதில் சிக்கல் நிலவும் சூழலில், தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு வந்த முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் எந்தவொரு முக்கியத்துவமும் அளிக்கப்படாமல் செய்வதறியாது தவித்து வருகின்றனர். அதேவேளையில், ஆரம்பம் முதலே விஜயுடன் பயணித்த உண்மைத் தொண்டர்களை விட்டுவிட்டு, புதிதாக வந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு விடுமோ என்ற ஆதங்கமும் சந்தேகமும் தவெகவின் அடிமட்ட நிர்வாகிகளிடையே கனன்று கொண்டிருக்கிறது.

   

குறிப்பாக, ஊழல் வழக்குகளில் சிக்கிய முன்னாள் அமைச்சர்களைக் கட்சியில் இணைத்ததற்கு தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புக் நிலவி வருகிறது. இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டத்தில் தவெக அமைச்சரின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிப் பல்வேறு ஒப்பந்தங்களைப் பெற முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் காய் நகர்த்தி வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘இருப்பதையும் பறிகொடுத்துவிட்டு நிற்பது’ போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இவர்கள், கட்சி ரீதியாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வராததால் அரசியல் ரீதியாக முடங்கிப்போயுள்ளனர்.

   

தவெக எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை வீழ்த்த முயற்சிகள் நடப்பதாகத் தகவல்கள் கசிந்து வரும் நிலையில், அதிமுகவில் இருந்து வந்தவர்களை மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட வைத்து வெற்றி பெறச் செய்தால் அவர்கள் கட்சி மாறுவார்களா என்ற சந்தேகம் தவெக தலைமைக்கு எழுந்துள்ளது. ஏற்கனவே பல்வேறு அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் சூழலில், மாற்றுக்கட்சியினருக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய சர்ச்சைகளை உருவாக்க தவெக விரும்பவில்லை. எனவே, வரும் நாட்களில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போதுதான் பதவிகளைத் துறந்து வந்த இந்த முன்னாள் தலைவர்களின் எதிர்கால அரசியல் கதி என்ன என்பது தெளிவாகத் தெரியும்.