அமித் ஷா உடனே பதவி விலக வேண்டும்…. அதிரடி முடிவை அறிவித்த அபிஜீத் திப்கே…. பதறுமா டெல்லி அரசியல்?…. அடுத்த பரபரப்பு….!

By Nanthini on ஆடி 31, 2026

Spread the love

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கோரிக்கைக்கு, CJP அமைப்பின் நிறுவனர் அபிஜீத் திப்கே முழு ஆதரவு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவில் ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதாகவும், தற்போதைய ஆட்சி அவர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருவதாகவும் மிகக் காரசாரமாகக் குற்றம்சாட்டினார்.

மேலும், கடந்த ஜூலை 20 அன்று டெல்லியில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறை இரக்கமின்றி தடியடி நடத்தியதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் நேரடி உத்தரவே காரணம் என்று சுட்டிக்காட்டிய அவர், மாணவர்களின் குரலை அடக்கும் வகையில் செயல்படும் அரசுக்கு எதிராகத் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்.