தமிழக வெற்றிக் கழகத்தில் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு முக்கிய வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், தங்களுக்கு மாவட்டச் செயலாளர் (மா.செ.) பொறுப்பு கூட தராமல் புறக்கணிப்பதாகக் கூறி, 10 தவெக MLA-க்கள் கட்சி நடவடிக்கைகளில் இருந்து தொடர்ச்சியாக விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
தலைமை மீதான இந்த அதிருப்தி மற்றும் ஆதங்கம் குறித்த விரிவான அறிக்கை முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, அவர் உடனடியாகச் செயல்பட்டு, இந்த உள்விவகாரத்தை சுமூகமாக பேசித் தீர்த்து நிலைமையைச் சரிசெய்யுமாறு கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு அதிரடி அறிவுறுத்தல் விடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
