திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி-ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலர் பெ. சண்முகத்தை விமர்சித்து “பெ சண்முகத்தின் உண்மை முகம்” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. பெ. சண்முகம் அண்மையில் எழுதிய “புதிய அரசியல் சூழலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிலைப்பாடும்” என்ற கட்டுரைக்கு எதிர்வினையாகவே முரசொலி நாளிதழ் இந்த விமர்சனத்தை முன்வைத்தது.
இதற்கு அதிகாரப்பூர்வமாக பதிலடி கொடுத்துள்ள தமிழ்நாடு சிபிஎம் தரப்பு, “பாஜக + திமுக + அதிமுக எனும் கொள்கை புடலங்காய் சிபிஐ(எம்)-க்கு எப்போதும் இல்லை” என தங்களது எக்ஸ் (X) தளத்தில் காரசாரமாகப் பதிவிட்டுள்ளது. மேலும், தங்களின் சமூக வலைத்தளப் போஸ்டரில் “திமுக வெளியில் வேறு.. உள்ளே வேறு..” என்று குறிப்பிட்டு, அக்கட்சியின் இரட்டை நிலப்பாட்டைக் கடுமையாக சாடியுள்ளது
தமிழகத்தின் புதிய அரசியல் சூழலில், குடியரசுத் தலைவர் ஆட்சியைத் தவிர்க்கவே தவெக ஆட்சி அமைக்க ஆதரவளித்தோம் என்றும், அது தங்களின் சொந்தக் கட்சி முடிவு என்றும் பெ. சண்முகம் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தார். இந்த சூழலில், தங்களை மற்ற கட்சிகளோடு ஒப்பிட்டு கொள்கையற்ற கூட்டணியாக சித்தரிப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டவட்டமாக மறுத்து இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
