“அதிர்ந்த கோட்டை… தவெக ஆட்சியை கவிழ்க்க ரகசிய டீல்?”… உளவுத்துறை ரிப்போர்ட்டால் பதறிய முதல்வர் விஜய்…!

By Nanthini on ஆடி 4, 2026

Spread the love

தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டத்தின் பின்னணியில் அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. தவெக ஆட்சியை வீழ்த்துவதற்காக நடத்தப்பட்ட ரகசியப் பேச்சுவார்த்தையின்போது, அக்கட்சியைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA-க்கள்) கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்த விவகாரம் முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குச் சென்றவுடன், தவறிழைத்த தவெக எம்.எல்.ஏ-க்கள் மீது உடனடியாக நேரடி நடவடிக்கை எடுத்தால் அது தற்போதைய ஆட்சிக்கு பலவீனமாகவோ அல்லது இழப்பாகவோ முடியும் என அவர் கணக்கு போட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் சாதுரியமாகச் செயல்பட்ட முதலமைச்சர், தங்கள் கட்சிப் பிரமுகர்களைக் கையாள்வதற்கு முன்பாக, பின்னணியில் இருந்து குதிரை பேரம் பேசி சதித் திட்டம் தீட்டிய முக்கிய நபர்களை வேரறுக்க காவல்துறையினருக்கு அதிரடி “கிளீன் ஆபரேஷன்”உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அவரது இந்தத் தீவிர உத்தரவைத் தொடர்ந்து முடுக்கிவிடப்பட்ட போலீஸ் விசாரணையின் மூலம், இந்த ஆட்சிக் கவிழ்ப்பு வழக்கில் தற்போது வரை 8 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.