அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் 5 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து அவர்களை தவெகவிற்குள் கொண்டு வருவதாக அவர் அக்கட்சித் தலைமைக்கு உத்தரவாதம் அளித்துள்ளதாக ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வியூகத்தின் அடிப்படையில்தான் அவர் கட்சியில் சேர்க்கப்பட்டதாகவும், அவ்வாறு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்யும் பட்சத்தில் தமிழகத்தில் மொத்தமாக 12 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் என்றும் கூறப்படுகிறது. இந்த இடைத்தேர்தல் வாய்ப்பைப் பயன்படுத்தி, அனைத்து இடங்களிலும் தவெக வெற்றி பெற்றால் சட்டமன்றத்தில் தங்களது பலத்தை நிரூபித்து தனிப்பெரும்பான்மையைப் பெற்றுவிடலாம் என அக்கட்சியினர் கணக்கு போட்டு தீவிரமாக திட்டமிட்டு வருவதாகவும் அரசியல் வட்டாரங்களில் பரவலாகப் பேசப்படுகிறது.
