தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிக் கவிழ்ப்பு சதித் திட்டம் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் பேரம் பேசப்பட்ட விவகாரம் தற்போதைய முதலமைச்சர் விஜய் அவர்களின் கவனத்திற்குச் சென்றுள்ளது. தவெக ஆட்சியை வீழ்த்துவதற்காக எதிர்க்கட்சிகள் தரப்பில் நடத்தப்பட்ட இரகசியப் பேச்சுவார்த்தையின்போது, அக்கட்சியின் சில எம்.எல்.ஏ-க்கள் கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக உளவுத்துறைக்கு மிக முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த அதிர்ச்சித் தகவல் முதலமைச்சர் விஜய்யின் செவிகளுக்கு எட்டியவுடன், தவறிழைத்த எம்.எல்.ஏ-க்கள் மீது உடனடியாக நேரடி நடவடிக்கை எடுத்தால் அது தற்போதைய ஆட்சிக்கு அரசியல்ரீதியாகப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என அவர் கணக்கு போட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, எம்.எல்.ஏ-க்களைக் குறிவைப்பதற்குப் பதிலாக, அவர்களுக்குப் பின்னால் இருந்து வலைவிரித்துப் பேரம் பேசிய முக்கியப் புள்ளிகளை வேரறுக்க காவல்துறைக்கு அவர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இந்த “கிளீன் ஆபரேஷன்” அதிரடி நடவடிக்கையின் விளைவாக, இதுவரை இந்தச் சதி வழக்கில் தொடர்புடைய 8 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
